spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிபத்தில் சிக்கிய முன்னணி பாடகி சின்மயி.!!!

விபத்தில் சிக்கிய முன்னணி பாடகி சின்மயி.!!!

-

- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் பாடகியாக மட்டும் இல்லாமல், படத்தில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் விளங்கி வருகிறார். இவரது காந்தக் குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

இவருக்கு பாடல் மூலம் எவ்வளவு புகழ் இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்ச்சைகளும் அதிகமாகவே எழுந்தன. இவர் வைரமுத்து மேல் சாட்டிய பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு இன்றும் விடாமல் தொடர்ந்து வருகிறது. இதன் மூலம் கவிஞர் வைரமுத்து விற்கும் சின்மயிக்கும் பெரும் வாக்குவாதமே நடந்து கொண்டிருந்தது. இவர் ராகுல் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராகுல் சந்திரன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார்.

we-r-hiring

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நீண்ட‌நாட்கள் கழித்து சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரும் அவர் குழந்தைகளும் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக தெரிவித்தார். ஒரு ஆட்டோகாரர் குடிபோதையில் வந்து தன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தின் மூலம் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

MUST READ