Homeசெய்திகள்சினிமாஅந்தக் காட்சி வேற லெவலில் இருக்கும்.... 'கங்குவா' படம் குறித்து சிறுத்தை சிவா!

அந்தக் காட்சி வேற லெவலில் இருக்கும்…. ‘கங்குவா’ படம் குறித்து சிறுத்தை சிவா!

-

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் சிறுத்தை சிவா தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.அந்தக் காட்சி வேற லெவலில் இருக்கும்.... 'கங்குவா' படம் குறித்து சிறுத்தை சிவா! சூர்யாவின் 42வது படமான இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் பாபி தியோல், நட்டி நட்ராஜ் ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் கார்த்தி வில்லனாக சிறப்பு தோற்றத்தில் தோன்றுவார் என்று சொல்லப்படுகிறது.அந்தக் காட்சி வேற லெவலில் இருக்கும்.... 'கங்குவா' படம் குறித்து சிறுத்தை சிவா! 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கங்குவா படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்தக் காட்சி வேற லெவலில் இருக்கும்.... 'கங்குவா' படம் குறித்து சிறுத்தை சிவா!அதன்படி அவர் கூறியதாவது, “கங்குவா படத்தில் குறிப்பிட்ட காட்சி ஒன்று இருக்கிறது. 200 அல்லது 300 படிக்கட்டுகளில் இரண்டு பேர் மற்றும் நடப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி மேகங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்டது. அந்த காட்சியை படமாக்கப்பட்ட பின் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அந்த காட்சி வேற லெவலில் இருக்கும். மேலும் இந்த படம் எமோஷனல் படமாக உருவாகியுள்ளது” என்று அப்டேட் கொடுத்துள்ளார். ஏற்கனவே படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஹைப் இருக்கும் நிலையில் படக்குழுவினர் வெளியிடும் ஒவ்வொரு தகவல்களும் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக தூண்டிவிடுகிறது.

MUST READ