Homeசெய்திகள்சினிமாமூச்சு விடாமல் பாடும் அனிருத்..... 'எல்ஐகே' பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!

மூச்சு விடாமல் பாடும் அனிருத்….. ‘எல்ஐகே’ பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!

-

எல்ஐகே படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் எல்ஐகே-LOVE INSURANCE KOMPANY. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மூச்சு விடாமல் பாடும் அனிருத்..... 'எல்ஐகே' பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு எல் ஐ சி என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் தலைப்பு எல்ஐகே என்று மாற்றப்பட்டுள்ளது. ரொமான்டிக் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிகர் சீமான் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அடுத்தது இந்த படத்தில் இருந்து தீமா எனும் முதல் பாடல் நாளை (அக்டோபர் 16) காலை 10.06 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இதனை அனிருத் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன், அனிருத்திடம் மூச்சு விடாமல் பாடும் பாடல் ஒன்றை கேட்டதாகவும் அதனால்
சிறந்ததை, தான் தந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அனிருத். இந்த பாடல் அனிருதின் இசையிலும் குரலிலும் உருவாகி இருக்கும் புதிய மெலோடி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத்தின் மற்ற பாடல்களைப் போல இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ