Homeசெய்திகள்சினிமாடியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நயன்தாராவின் பெயர் இதுதானா?

டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நயன்தாராவின் பெயர் இதுதானா?

-

- Advertisement -

டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நடிக்கும் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நயன்தாராவின் பெயர் இதுதானா?

லேடி சூப்பர் ஸ்டார் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் ரஜினி, அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நயன்தாராவின் பெயர் இதுதானா? மேலும் டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. இதற்கிடையில் மலையாள நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து டியர் ஸ்டூடண்ட்ஸ் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். லவ் ஆக்சன் டிராமா படத்திற்கு பிறகு நயன்தாரா – நிவின் பாலி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தினை சந்தீப் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பூஜை உடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நயன்தாராவின் பெயர் இதுதானா?இந்த படத்தில் நடிகை நயன்தாரா பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா வித்யா ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

MUST READ