- Advertisement -
கோலிவுட்டில் முக்கிய நடிகை அனுயா பகவத். இவர் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். இராசேசு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஒரே திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அனுயா. இதைத் தொடர்ந்து தமிழில், மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், கோரா, நான் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இத்திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. ரிரிலீஸ் ஆனபோதும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்காக நடிகை அனுயா ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில்தான் அவர் தான் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருந்தார். அதில், ஒரு சமயத்தில் இணையத்தில் என்னைப் பற்றி வெளியான அந்த மார்பிங்க காணொலியால் நான் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகினேன்.




