Homeசெய்திகள்சினிமாஅவங்க சொன்னாதான் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்.... 'அமரன்' படம் குறித்து சிவகார்த்திகேயன்!

அவங்க சொன்னாதான் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்…. ‘அமரன்’ படம் குறித்து சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தினை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். அவங்க சொன்னாதான் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்.... 'அமரன்' படம் குறித்து சிவகார்த்திகேயன்!கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். அவங்க சொன்னாதான் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்.... 'அமரன்' படம் குறித்து சிவகார்த்திகேயன்!இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர அமரன் திரைப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இப்படம் குறித்து பேசி உள்ளார். அவங்க சொன்னாதான் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்.... 'அமரன்' படம் குறித்து சிவகார்த்திகேயன்!அவர் பேசியதாவது, “இது உண்மை கதை. இதன் உண்மை தன்மையை தனது திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என ராஜ்குமார் பெரியசாமி நினைத்தார். எனவே ராணுவ வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டேன். துப்பாக்கியை எப்படி பிடிப்பது என்று கற்றுக் கொண்டேன். ஒரு ராணுவ வீரர் இந்த படத்தை பார்த்தால் நம் வாழ்க்கையை அப்படியே படமாக எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும் என்பதுதான் 100 சதவீத வெற்றி என ராஜ்குமார் பெரியசாமி யோசித்தார். அதனால்தான் அவர்களுடன் இணைந்து எல்லாத்தையும் கற்றுக்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ