Homeசெய்திகள்சினிமாஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் 'SK 23'!

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் ‘SK 23’!

-

- Advertisement -
kadalkanni

SK 23 படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் 'SK 23'!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்தது இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது திரைப்படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தின் தனது 25வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். SK 23 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் 'SK 23'!இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட தூத்துக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக SK 23 படப்பிடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்ட சிவகார்த்திகேயன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மீண்டும் SK 23 படப்பிடிப்பில் இணைந்தார். இந்நிலையில் இந்த படமானது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ