spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'SK23' படக்குழுவுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன்!

‘SK23’ படக்குழுவுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை SK23 பட குழு உடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் சிவகார்த்திகேயன் தனது 21 வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்திலும் கமல்ஹாசனின் தயாரிப்பிலும் உருவாகி வரும்
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.SK23 படக்குழுவுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன்!

we-r-hiring

இதற்கிடையில் சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. SK23 படக்குழுவுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன்!இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிப்பதாகவும் வில்லனாக வித்யூத் ஜம்வால்  நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் இப்படம் ஏ ஆர் முருகதாஸின் துப்பாக்கி கத்தி உள்ளிட்ட படங்களை போல் முழு நீள ஆக்சன் படமாக உருவாக உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது 39 ஆவது பிறந்த நாளை SK23 படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

MUST READ