Homeசெய்திகள்சினிமா'மகாராஜா' பட இயக்குனரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

‘மகாராஜா’ பட இயக்குனரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -
kadalkanni

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தை விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமான நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.'மகாராஜா' பட இயக்குனரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்! பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜனிஷ் லோக்நாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் 10 நாட்களில் 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது என பட குழுவினர் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். படமானது தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருவதால் பல்வேறு தரப்பினரும் மகாராஜா திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே கவின், லோகேஷ் கனகராஜ், அர்ச்சனா கல்பாத்தி போன்ற பிரபலங்கள் மகாராஜா திரைப்படத்தை பாராட்டிய நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குனர் நித்திலனை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நித்திலன் சாமிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்திற்கு பிறகு SK23 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ