Homeசெய்திகள்சினிமா'மாமன்' படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன்.... நன்றி தெரிவித்த சூரி!

‘மாமன்’ படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன்…. நன்றி தெரிவித்த சூரி!

-

- Advertisement -

நடிகர் சூரி சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.'மாமன்' படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன்.... நன்றி தெரிவித்த சூரி!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சூரி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே விடுதலை 1, 2, கருடன் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். அடுத்தது மதிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சூரியுடன் இணைந்து ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா, கீதா கைலாசம், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 'மாமன்' படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன்.... நன்றி தெரிவித்த சூரி!இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் திருச்சி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அதேசமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. எனவே இப்படம் 2025 மே மாதம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது மாமன் படப்பிடிப்பு தளத்திற்கு சிவகார்த்திகேயன் வருகை தந்திருக்கிறார். அப்போது அவர் படக்குழுவினருடன் கலகலப்பாக பேசி மகிழ்ந்ததற்காக நடிகர் சூரி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ