சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோரின் நடிப்பில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை யோகி பாபு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
சாந்தி டாக்கிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் குறித்த அடுத்தடுத்து அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் ஓவர் சீஸ் ரிலீஸ் உரிமையை ஹம்சினி என்டர்டைன்மென்ட் & அகிம்சா ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.
மேலும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் வருகின்ற ஜூலை 2ஆம் தேதி சென்னை சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்க இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதை தொடர்ந்து மாவீரன் படத்தின் டிரைலரும் வருகின்ற நாளை (ஜூலை 2) வெளியாகும் என்று படக்குழுவினர் வீடியோ உடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.