சிவகார்த்திகேயன் பட நடிகை ஜெயிலர் 2 படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதைத் தொடர்ந்து இவர், தனுஷ், ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார். தற்போது கென் ராய்சன் இயக்கத்தில் கவினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் ‘ஓஜி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியங்கா மோகன். இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன், ஜெயிலர் 2 படம் குறித்து பேசி உள்ளார்.
அதன்படி சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன், ” ஜெயிலர் 2 படத்தில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அதில் இல்லை” என்று கூறியுள்ளார். ஜெயிலர் 2 திரைப்படமானது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது.

மேலும் பவன் கல்யாண் நடித்திருக்கும் ‘ஓஜி’ படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


