நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியானது. கார்த்தியின் 25வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து கார்த்தி தனது 26 வது படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம் நடிகர் கார்த்தி, 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். கார்த்தி 27 என்ற தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சின்னத்திரை நடிகை சுவாதி கொண்டே நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை ஸ்ரீதிவ்யா இணைந்துள்ளதாக தகவல் கசிந்தது. அதன்படி நடிகை ஸ்ரீதிவ்யா, இந்த படத்தில் கார்த்திக்கு தங்கையாக நடித்து வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எமோஷன்ஸ் நிறைந்த குடும்பத் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


