spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனது தோல்விப் படங்களை பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

தனது தோல்விப் படங்களை பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

தனது தோல்விப் படங்களை பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சிவகார்த்திகேயன். டைமிங் காமெடி, ரொமான்ஸ், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்திலும் சிக்ஸர் அடித்து ரசிகர்களின் மனதை வென்றவர். மெரினா முதல் மாவீரன் வரை பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெறவில்லை. அந்தப் படங்களை குறித்து சிவகார்த்திகேயன் தன்னுடைய கருத்துக்களை இன்டர்வியூ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வெளியான “மிஸ்டர் லோக்கல்” திரைப்படமும், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான “பிரின்ஸ்” திரைப்படமும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை தான் கொடுத்தது. குறிப்பாக பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு இயக்குனர் அனுதீப் காரணம் இல்லை. அந்தக் கதையில் வேறு யாரோ ஒரு வளர்ந்து வரும் நடிகர் நடித்திருந்தால் நிச்சயம் அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும். நான் சில படங்களில் சரியான நேரத்தில் சம்பளம் வாங்கி விட்டேன் சில படங்களில் சம்பளம் வாங்கவே இல்லை ஆனால் என்னுடைய குறிக்கோள் சம்பாதிப்பது மட்டும் இல்லாமல் மாவீரன், கனா, அயலான் போன்ற தரமான படங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என்று கூறியுள்ளார்.
மேலும் அவருடைய படங்களான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்தன. அதேசமயம் நல்ல கன்டென்ட் உடன் வெளியான மாவீரன் திரைப்படம் 89 கோடி மட்டுமே வசூலித்தது. இதில் எந்த படம் வெற்றி படம் என கேட்டால் நிச்சயமாக மாவீரன் படத்தை தான் சொல்லுவேன். ஏனெனில் அப்படத்தில் ஒரு தரமான கருத்து இருந்தது. அப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு முன்னதாக வெளியான அவருடைய முதல் படமான மண்டேலா ஓடிடி தளத்தில் தான் ரிலீஸ் ஆகியிருந்தது. தனது தோல்விப் படங்களை பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!அது மட்டும் இல்லாமல் புதிய இசையமைப்பாளர்,புதிய தயாரிப்பாளர் என சோதனை முயற்சியாகத் தான் மாவீரன் திரைப்படம் உருவானது. எந்த ஒரு பண்டிகை நாளும் இல்லாமல் வெளியான போதும் 89 கோடியை வசூலித்திருந்தது. ஒவ்வரு படங்களை குறித்து ஒவ்வொருவருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்கும். சாதாரண கதையை கொண்ட டான் எப்படி 125 கோடியை வசூலித்தது? என சிலர் கேட்பார்கள். நல்ல கன்டென்ட் இருந்த மாவீரன் 100 கோடியை கூட வசூலிக்கவில்லையே! என்றும் சிலர் கேட்பார்கள். அந்த சமயத்தில் என்னுடைய நினைவில் தோன்றுவது “தம்பி…தம்பி… எனக்கு தெரியும் தம்பி. தெரியாமலாம் ஒன்னும் நாங்க இங்க இல்ல..” என்பதுதான் என நகைச்சுவையாக கூறியுள்ளார். மேலும் படங்கள் ரசிகர்களை கவராத போது தன்னுடைய அடுத்த படத்தில் இந்த தவறுகளை சரி செய்து ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

MUST READ