நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்க இருக்கிறார் ரவி. அதாவது ஏற்கனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்த படத்தை ரவி மோகனே இயக்கவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட் 26) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
“Producing films has given me more happiness than Acting. #RaviMohan sir I’m your senior as producer, please produce more films😀. We had a great time on the sets of #Parasakthi. It’s very special to act against in the film🤜🤛”
– #Sivakarthikeyan pic.twitter.com/SmVP5QcxVM— AmuthaBharathi (@CinemaWithAB) August 26, 2025
அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “நடிப்பைவிட படங்கள் தயாரிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் அதிலிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும். ரவி சார், நான் ஒரு தயாரிப்பாளராக உங்களைவிட சீனியர். என்னிடம் நீங்கள் எந்த சந்தேகம் வேண்டுமானாலும் கேட்கலாம். பராசக்தி படப்பிடிப்பில் ஜாலியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.