மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்ஷன் கலந்த கமர்சியல் படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. மேலும் இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும்? என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி 2025 செப்டம்பர் 5 அன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இனிவரும் நாட்களில் டீசர் போன்ற மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.