ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது அமரன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 31 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 18) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி குறித்து பேசியுள்ளார். அதாவது , பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியை பார்த்து மற்றவர்கள் எப்படி ரசிகராக மாறினார்களோ அப்படி தானும் ரசிகராக மாறிவிட்டேன் என சிவகார்த்திகேயன் கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “பிரேமம் படம் பார்த்த பிறகு சாய் பல்லவியை தொடர்பு கொண்டு மலர் டீச்சராக படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினேன். ஆனால் சாய் பல்லவி, ‘நன்றி அண்ணா’என்று சொன்னாங்க. அப்போது நான் ஷாக் ஆகிவிட்டேன். உடனே அண்ணன் மட்டும் சொல்லாதீங்க. நான் மலர் டீச்சரிடம் பேசுவதாக நினைத்துதான் பேசுகிறேன். அது மாதிரியே நீங்களும் பேசுங்க. ஒரு நாள் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ற மாதிரி சூழல் வரும் என்று சொன்னேன். அப்போது நான் சொன்னது இப்போது பல வருடங்கள் கழித்து நடந்திருக்கிறது” என்று கலகலப்பாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
- Advertisement -