நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன்படி அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கத்தின் தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1965 நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பாலிவுட் நடிகர் அமீர்கான் குறித்து பேசியுள்ளார். “நான் பாலிவுட் நடிகர் அமீர் கானை பலமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அமீர்கான் என்னிடம் உங்களுடைய முதல் பாலிவுட் படம் என்னுடைய தயாரிப்பில் தான் இருக்கும். நல்ல கதை வந்தால் சொல்லுங்கள் என்றார்” என அமீர்கான் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
எனவே வருங்காலத்தில் சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் அறிமுகமாகும் தகவல் அறிந்த ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.