சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் உலகம் முழுவதும் திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கிடையில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் கதை கேட்டிருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போகிறார் என தகவல் கசிந்திருந்தது. அதன்படி வெங்கட் பிரபு இயக்கியிருந்த கோட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். எனவே வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவிற்கு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். அதாவது தான் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி இருப்பதனால் 2025 ஆம் ஆண்டில் இறுதியில் வெங்கட் பிரபுவிற்கு கால் ஷீட் தருவதாக கூறியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். ஆகையினால் இதற்கிடையில் வெங்கட் பிரபு வேறொரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கிறது.