spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அமரன்' பட லுக்கில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

‘அமரன்’ பட லுக்கில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். அதன்படி தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். 'அமரன்' பட லுக்கில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ், சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது நேரத்தையும் செலவிட்டு வருகிறார். அதாவது சிவகார்த்திகேயன், தனது உறவினரான ஆர்த்தியை கடந்த 2010 திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற மகளும், குகன், பவன் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 14) சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள். இந்த தினத்தில் சிவகார்த்திகேயன், அமரன் படத்தில் நடித்திருந்ததைப் போல் ராணுவ அதிகாரி கெட்டப்பில் வந்து தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சிவகார்த்திகேயனும், ஆர்த்தியும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் தாடி, மீசையை சேவ் செய்துவிட்டு ராணுவ உடை அணிந்து கார்த்தியின் பின்னால் சென்று நிற்கிறார். அதை கவனிக்காத ஆர்த்தி, தற்செயலாக திரும்பி பயந்து போவதும் பின் அது தன் கணவர் தான் என்பதை தெரிந்து சிரிப்பதுமாக க்யூட்டாக ரியாக்சன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ