spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடம் தாறுமாறா இருக்கப் போகுது... ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

படம் தாறுமாறா இருக்கப் போகுது… ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

we-r-hiring

பிரபல இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சிவகார்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஏ ஆர் முருகதாஸ் சார் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நான் உங்கள் இயக்கத்தில் எனது 23வது படத்தில் நடிக்க உள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் கதையைக் கேட்ட பிறகு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த படம் எனக்கு எல்லா வகையிலும் சிறப்பான படமாக இருக்கும். படப்பிடிப்பை தொடங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. நன்றி மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏ ஆர் முருகதாஸ் இதற்கு, ” நன்றி சிவா. எனது அடுத்த திட்டத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சில சினிமா மாயாஜாலங்களை இருவரும் இணைந்து உருவாக்குவோம்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ