பென்ஸ் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் தற்போது பென்ஸ் எனும் திரைப்படம் உருவாகிறது. இதனை பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் தனது ஜிஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இதற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டது. அதே சமயம் இந்த படம் லோகேஷ் கனகராஜ் எல்சியு-வில் இணைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் நேற்று (மே 12) பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டுள்ளதாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.

மேலும் பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து மாதவன், நிவின் பாலி, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.