சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். வில்லனாக ராகுல் போஸ் நடித்திருந்தார். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் பலரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் கேரியரில் இந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்ற படங்களை விட இந்த படத்தில் வித்தியாசமாகவும் வெறித்தனமாகவும் இருந்தது. அவருக்கு இணையாக சாய் பல்லவியும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 42.3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமரன் திரைப்படம் இனிவரும் நாட்களில் இந்த படம் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -