நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்த வருகிறார். சிவகார்த்திகேயனின் 21 வது படமான இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். ராணுவம் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக்கி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி வருகிறது. ஆகவே படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் V என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் நிலையில் ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்பந்தமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் அதன்படி ஏற்கனவே இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயனின் படங்கள் பெரும்பாலும் விடுமுறை நாட்களை டார்கெட் செய்து வெளியிடப்படும்.
அதன்படி அமரன் திரைப்படத்தையும் விடுமுறை நாட்களை குறி வைத்து வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -