- Advertisement -
மீண்டும் அயலான் திரைப்படம் சிக்கலில் சிக்கியுள்ளதாகவும், இதனால் நாளை படத்தின் வெளியீடு குழப்பத்தில் நீடிப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி புகழ் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதையடுத்து அட்லீ இயக்கிய குறும்படங்களில் நடித்த அவர், தொடர்ந்து மெரினா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். தற்போது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படங்கள் டான் மற்றும் மாவீரன். இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.


இதையடுத்து, அவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் அயலான். இப்படத்தில் இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர் ரவிக்குமார் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.



