மாவீரன் படத்தின் பிரம்மாண்ட மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, சுனில், சரிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முழு ஆக்சன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான முன்னோட்டம் மற்றும் Scene ah Scene ah பாடல் உள்ளிட்டவை சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரம்மாண்ட செட் அமைக்கப்படுகிறது. படத்தின் நடிகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாகத் தெரிகிறது.
இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் உலகெங்கிலும் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.