Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 4 பிரம்மாண்ட படங்கள்... ம்யூசிக் டைரக்டர்ஸ் குறித்த குட்டி அப்டேட்!

சிவகார்த்திகேயனின் 4 பிரம்மாண்ட படங்கள்… ம்யூசிக் டைரக்டர்ஸ் குறித்த குட்டி அப்டேட்!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வரவிருக்கும் படங்களின்  இசையமைப்பாளர்கள் குறித்த விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முழுக்க ஆக்சன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் இருந்து வெளியான Scene ah Scene ah பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. படத்தின் அடுத்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்குமார் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதையடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறாராம். அனிருத் சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்தாலே ஆல்பம் சூப்பர் ஹிட் என்பது கன்ஃபார்ம்.

இதற்கிடையில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

MUST READ