சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகயிருக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.


அந்தப் படத்தை ‘ரங்கூன்’ படத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் புதிய படத்திற்காக சிவகார்த்திகேயன் மும்பையில் 20 நாட்கள் தீவிர பயிற்சியை மேற்கொள்கிறாராம். அந்தப் பயிற்சி முடிந்ததும் மே மாதம் காஷ்மீரில் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம். மேலும் முதலில் இந்தப் படத்தில் முதலில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ‘அயலான்’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


