சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் காணப்படும் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ‘ரங்கூன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் அவர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
அதில் “நம்மை நமது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நபர்களுடன் நட்பு பாராட்டுங்கள் என்று அறிவார்ந்த ஒருத்தர் சொல்லியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் மும்பையில் 20 நாட்கள் தீவிர பயிற்சியை மேற்கொள்கிறாராம். அந்தப் பயிற்சி முடிந்ததும் மே மாதம் காஷ்மீரில் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ‘அயலான்’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram