நடிகர் எஸ்.ஜே. சூர்யா, வீர தீர சூரன் படம் குறித்தும் விக்ரம் குறித்தும் பேசியுள்ளார்.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் நடிகர் விக்ரமின் 62 வது படமாகும். இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. நாளை மறுநாள் (மார்ச் 20) இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, அருண்குமார், துஷாரா ஆகியோர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ். ஜே. சூர்யா, நடிகர் விக்ரம் குறித்தும் வீர தீர சூரன் படம் குறித்தும் பேசி உள்ளார். அதன்படி அவர், “விக்ரம் சார் இதில் மீண்டும் ‘தூள்’ பட லுக்கில் நடித்துள்ளார். இது தரமான படமாக உருவாகியிருக்கிறது. அந்தப் படம் கமர்சியல் படம் என்றால் இது கிளாஸ் கமர்சியல் படம்” என்று தெரிவித்துள்ளார்.
‘தூள்’ பட லுக்கில் விக்ரம்…. தரமான கிளாஸ் கமர்சியல்…. ‘வீர தீர சூரன்’ குறித்து எஸ்.ஜே. சூர்யா!
-
- Advertisement -