நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆரம்பத்தில் வாலி குஷி போன்ற வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின்னர் ஹீரோவாகவும் உருவெடுத்து சில படங்களை தானே இயக்கி நடித்து இருந்தார்.
தற்போது இவர் வில்லனாகவும் மாறி பல பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். அந்த வகையில் மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார் எஸ் ஜே சூர்யா. அடுத்ததாக வீர தீர சூரன், சர்தார் 2, சூர்யாவின் சனிக்கிழமை என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் எஸ் ஜே சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு கில்லர் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை சமயம் நடிகர் எஸ் ஜே சூர்யா பன்றி வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தை இந்தியன் 2 திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய ஷங்கரின் உதவியாளர் லட்சுமி சரவணகுமார் இயக்க உள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -


