SK 23 திரைப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தற்போது சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேசமயம் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் 23 வது படமாகும். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தவிர ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது ஏ.ஆர். முருகதாஸின் மற்ற படங்களை போல் ஆக்ஷன் கலந்த கமர்சியல் படமாக உருவாகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு ஏறத்தாழ 90% நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ‘சிங்க நடை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் இப்படம் 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், SK 23 படமானது மெடிக்கல் ஆக்சன் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.