Homeசெய்திகள்சினிமாவிரைவில் வெளியாகும் 'SK 25' டைட்டில் டீசர்.... எப்போது தெரியுமா?

விரைவில் வெளியாகும் ‘SK 25’ டைட்டில் டீசர்…. எப்போது தெரியுமா?

-

- Advertisement -

SK 25 படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.விரைவில் வெளியாகும் 'SK 25' டைட்டில் டீசர்.... எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக SK 25 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்திற்கு 1965 அல்லது பராசக்தி என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.விரைவில் வெளியாகும் 'SK 25' டைட்டில் டீசர்.... எப்போது தெரியுமா? அதே சமயம் இந்த படத்தின் டைட்டில் டீசர் பிப்ரவரி 17 சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதாவது பிப்ரவரி 3ஆம் தேதியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறையில் நுழைந்து 13 வருடங்களை நிறைவு செய்யும் நிலையில் அதை கொண்டாடும் விதமாக SK 25 டைட்டில் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ