சூரரைப் போற்று இந்தி ரீமேக் சர்ஃபிரா… வெளியானது டிரைலர்…
- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்தியாவின் மளிகை வானூர்தி சேவையை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக ஹிட் அடித்தது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் சர்ஃபிரா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதில் சூர்யா வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்க, அபர்ணா பாலமுரளி கதாபாத்திரத்தில் ராதா மதன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது,
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சர்ஃபிரா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அக்ஷய் குமார், சூர்யா ஆகியோர் படத்தின் டிரைலரை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஜூலை 12-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகிறது.