spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவசூலில் மட்டுமல்ல அந்த விஷயத்திலும் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி!

வசூலில் மட்டுமல்ல அந்த விஷயத்திலும் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் ஹீரோவாக உருவெடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். வசூலில் மட்டுமல்ல அந்த விஷயத்திலும் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி!அந்த வகையில் கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோரும் அடங்குவர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக பிரபலமாகி ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.வசூலில் மட்டுமல்ல அந்த விஷயத்திலும் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி!

சந்தானத்தை போல் நடிகர் சூரியும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியான அதே நாளில்தான் சூரி கதாநாயகனாக நடித்த மாமன் திரைப்படம் வெளியானது. குடும்ப பின்னணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் சூரி ஹீரோவாக இதுவரை சில படங்களில் தான் நடித்திருக்கிறார். சந்தானம் கடந்த 10 வருடங்களாகவே ஹீரோவாக நடித்து வருகிறார். வசூலில் மட்டுமல்ல அந்த விஷயத்திலும் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி!ஆனாலும் சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்காக ரூ. 5 கோடி வாங்கி இருப்பதாகவும், மாமன் படத்திற்காக சூரி, ரூ.8 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சூரி ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் வெற்றிகளை தந்துள்ளது. ஆனால் சந்தானம் நடித்த சில படங்கள் எதிர்பார்த்து வெற்றியை தரவில்லை. எனவே நடிகர் சூரி, ஒரு ஹீரோவாக சந்தானத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ