spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸின் 'கல்கி' படத்தில் இணைந்த சூரி பட நடிகை!

பிரபாஸின் ‘கல்கி’ படத்தில் இணைந்த சூரி பட நடிகை!

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சலார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.பிரபாஸின் 'கல்கி' படத்தில் இணைந்த சூரி பட நடிகை!

இதற்கிடையில் நடிகர் பிரபாஸ், பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898AD படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டைம் டிராவல் சயின்ஸ் ஃபிக்ஷன் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் கல்கி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2024 மே 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் ஏற்கனவே இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டிருந்தனர். இதற்கிடையில் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.பிரபாஸின் 'கல்கி' படத்தில் இணைந்த சூரி பட நடிகை!

we-r-hiring

இந்நிலையில் கல்கி படம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தில் பிரபல மலையாள நடிகையான அன்னா பென் இணைந்துள்ளார். இவர் கும்பலங்கி நைட்ஸ், ஹெலன், நைட் டிரைவ் , திரிசங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அன்னா பென் , தமிழில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ