நகைச்சுவை நடிகரான சூரி தற்போது பல படங்களில் கதாநாயகனாக கலக்கி வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விடுதலை இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது. அதே சமயம் சூரி, பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கொட்டுக்காளி எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் சூரி.
சூரி நடிப்பில் உருவாகும் படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. அந்த வகையில் ஏழு கடல் ஏழுமலை, விடுதலை ஆகிய படங்கள் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இவ்வாறு தன் நடிப்பினால் இந்திய அளவில் முத்திரை பதித்து வருகிறார் நடிகர் சூரி.
துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தம்பி சூரி கதைநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு❤️❤️❤️🙏🙏🙏🙏 வெல்வோம்💪💪💪💪💪💪 pic.twitter.com/JPqQwNI0Ub
— P.samuthirakani (@thondankani) January 3, 2024

இந்நிலையில் சூரி கதாநாயகனாக நடிக்கும் கருடன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது வெற்றிமாறன் எழுதிய கதையில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் திரைப்படம் தான் கருடன். சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோரின் கூட்டணியில் இந்த கருடன் திரைப்படம் உருவாகி வருகிறது.மேலும் இப்படம் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்தாக நடிகர் சமுத்திரக்கனி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.