நடிகர் சூரி, கருடன் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பிற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திற்கு பிறகு நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் கடந்த மே 31 அன்று கருடன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் பழிவாங்கல், துரோகம், வஞ்சம், விஸ்வாசம் என அனைத்தும் கலந்த கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருந்தது. இப்படமானது வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தால் சூரியின் அசுரத்தனமான நடிப்பிற்கு ரசிகர்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர்.
பேரன்பும் பெருநன்றியும் #garudan pic.twitter.com/MWQeNvbzDE
— Actor Soori (@sooriofficial) June 7, 2024
மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றி நடை போடுகிறது கருடன். சமீபத்தில் கூட படத்திற்கு கிடைத்த வெற்றியை படக் குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து நடிகர் சூரி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.