Homeசெய்திகள்சினிமாரிலீஸ் தேதியை அறிவித்த 'கொட்டுக்காளி' படக்குழு!

ரிலீஸ் தேதியை அறிவித்த ‘கொட்டுக்காளி’ படக்குழு!

-

- Advertisement -

சூரி நடிப்பில் உருவாகும் கொட்டுக்காளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரிலீஸ் தேதியை அறிவித்த 'கொட்டுக்காளி' படக்குழு!

ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்படத்தை தொடங்கிய நடிகர் சூரி கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தர அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் சூரி. அந்த வகையில் கடந்த மே மாதம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்திருந்த கருடன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரிலீஸ் தேதியை அறிவித்த 'கொட்டுக்காளி' படக்குழு!இந்த படத்தில் நடிகர் சூர்யா ஆக்சன் ஹீரோவாக மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் பிரபலமான பி எஸ் வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து இப்படமானது பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பை பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ