Homeசெய்திகள்சினிமாபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு G.O.A.T இன் சிறப்புத் திரையிடல்!

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு G.O.A.T இன் சிறப்புத் திரையிடல்!

-

- Advertisement -

பார்வையற்ற பார்வையாளர்களுக்கான G.O.A.T இன் சிறப்புத் திரையிடல்!

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு  என ‘தி கோட்’ திரைப்படம் அக்டோபர் 12 ஆம் தேதி அன்று திரையிடப்பட்டது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பார்வையற்ற பார்வையாளர்களுக்கான G.O.A.T இன் சிறப்புத் திரையிடல்!

இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

 

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்முறையாக ஆடியோ டிஸ்கிரிப்ஷன் (விளக்கங்கள்) முறையில் ‘தி கோட்’ திரைப்படம் திரையிடப்பட்டது. AGS எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு காட்சியில், ஏராளமான பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, படத்தின் ஒலியை கேட்டு மகிழ்ந்தனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ