Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா.... இணையும் ட்ரெண்டிங் நடிகை!

விஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா…. இணையும் ட்ரெண்டிங் நடிகை!

-

நடிகர் விஜய் தேவரகொண்டா கீதகோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா ஃபேமிலி ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதேசமயம் விஜய் தேவரகொண்டா தனது 12வது திரைப்படத்திலும் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டாபடத்தில் இருந்து விலகும் ஸ்ரீலீலா.... இணையும் ட்ரெண்டிங் நடிகை!கௌதம் தின்னானுரி இயக்கும் இந்த படமானது ஸ்பை திரில்லர் கதைகளத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீ லீலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இவர் ஏற்கனவே மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் தற்போது படிப்பில் கவனம் செலுத்த இருப்பதால் VD12 படத்திலிருந்து விலகியதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தில் பிரேமலு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மமிதா பைஜுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் தேவரகொண்டாபடத்தில் இருந்து விலகும் ஸ்ரீலீலா.... இணையும் ட்ரெண்டிங் நடிகை!இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மமிதா பைஜு தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ