- Advertisement -
கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் நீளிரா என்ற புதிய படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் இன்று முன்னணி இயக்குநராக, தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படத்தின் மூலம் அவர் திரைக்கு இயக்குநராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். திகில் கலந்த காமெடி திரைப்படமாக வெளியான பீட்சா, இயக்குநருக்கு மட்டுமன்றி, விஜய் சேதுபதிக்கும் திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து, ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். இத்திரைப்படத்திற்காக இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன
ஜிகர்தண்டா திரைப்படம் கார்த்திக் சுப்பராஜ் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதையடுத்து, இறைவி படத்தை இயக்கினார். இதில் பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இதையடுத்து, பேட்ட திரைப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த் நடித்த இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா 2.
Feeling really Happy and Proud to have produced this very special Film #Neelira directed by Eelam Tamil Filmmaker Someetharan @someeth
Starring @Naveenc212 #KapilaVenu #Sananth #Vidhu @RoopaKoduvayur @RohitDKokate@sidhu_kumaresan
Am sure this War Drama straight from Memories… pic.twitter.com/hg3wjRvvQA
— karthik subbaraj (@karthiksubbaraj) January 14, 2024