இயக்குனர் வெற்றிமாறன் STR 49 படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக ‘விடுதலை பாகம் 2’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கிடையில் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதன் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் வெற்றிமாறன், சிம்புவை வைத்து புதிய படம் பண்ணப்போவதாகவும் அந்த படத்திற்கு தற்காலிகமாக ‘STR 49’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வீடியோ வெளியானது. அந்த அறிவிப்பு வீடியோவை பார்க்கும் போது ‘STR 49’ படமானது வடசென்னை யுனிவர்ஸ் படமாக உருவாகும் போல் தெரிகிறது. எனவே எதிர்பார்ப்புகளும் அதிகமாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் எனவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#STR49 – I have a 1hr15min of Stuff.. The film has 5 Episodes.. Not Even the First Episode is Over.. I don’t know what I’m going to do.. It’s Gonna be another Two part film..💥
: #Vetrimaaran in a Recent Interview ⭐ pic.twitter.com/ykl9uKCS2n
— Laxmi Kanth (@iammoviebuff007) September 18, 2025

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் நடந்த பேட்டியில் STR 49 படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “நான் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் கொண்ட கதையை வைத்திருக்கிறேன். STR 49 படம் 5 எபிசோடுகள் கொண்டிருக்கும். முதல் எபிசோடு கூட முடியவில்லை. நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இது இன்னொரு இரண்டு பாகம் கொண்ட படமாக உருவாகும் போல் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.