Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் குபேரா... பட தலைப்புக்கு புதிய சிக்கல்...

தனுஷ் நடிக்கும் குபேரா… பட தலைப்புக்கு புதிய சிக்கல்…

-

தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா படத்தின் தலைப்புக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தமிழ் திரையுலகம் மட்டுமன்றி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி பிசியாக நடித்து வருபவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த தனுஷ் தற்போது தமிழ் திரையை தாண்டி பிற மொழிப்படங்களிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்தியில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இந்தியில் மட்டுமில்லாமல், தமிழிலும் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் இந்தியில், ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிட் அடித்தது. தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார்.

இறுதியாக அவரது நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் புதிய படம் தான் குபேரா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா இந்த தலைப்பை தெலங்கானா திரைப்பட வர்த்தக சபையில் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வரத்தக சபையில் முறையிட்டும், அவருக்கு சரியான பதில் தற்போது வரை கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால், அவர் படத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ