இயக்குனர் சுதா கொங்கரா, ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரவி ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதிலும் ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு இவரை ஏராளமான ரசிகர்கள் பின்பற்ற தொடங்கியுள்ளார்கள். அந்த அளவுக்கு அந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹீரோக்கள் பொதுவாக கமர்சியல் படங்களில் நடித்து வரும் நிலையில் வித்தியாசமான கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவார் ரவி. மேலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணிவான, எளிமையான நடிகர். இவர் தற்போது ‘கராத்தே பாபு’, ‘ப்ரோ கோட்’, ‘பராசக்தி’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர யோகி பாபு நடிப்பில் ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனும் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதே சமயம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார் ரவி. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 10) தன்னுடைய 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ரவிக்கு இயக்குனர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Look for the quietest spot on sets and u will find Ravi over there, preparing, unruffled, and 200 percent into the character and the scene! Soo enjoying working with you, my beautiful gentleman actor !! Happy happy birthday and may you have the best times ahead @iam_RaviMohan 🫶 pic.twitter.com/4lEgY5HTHv
— Sudha Kongara (@Sudha_Kongara) September 10, 2025

அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தை தேடினால் அங்கே ரவி இருப்பார். அவர் படத்திற்காக தயாராகி, பதட்டம் இல்லாமல், கதாபாத்திரத்திலும், காட்சியிலும் 200 சதவீதம் ஈடுபடுவதை காண முடியும். என் அழகான ஜென்டில்மேன் நடிகரே! உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு இனிய நாட்கள் அமைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார். ‘பராசக்தி’ படத்தில் நடிகர் ரவி வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.