இயக்குனர் சுதா கொங்கரா, பராசக்தி படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்தவர் சுதா கொங்கரா. இவர் தற்போது சிவகார்த்திகேயன், நடிப்பில் பராசக்தி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாக உருவாகும் இந்த படம் இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படமானது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்க ரவி கே. சந்திரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கி மதுரை, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சில நாட்கள் படப்பிடிப்பிற்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, சமீபத்தில் நடந்த பேட்டியில், “பராசக்தி படப்பிடிப்பு முடிவடைய இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருக்கிறது. சிவகார்த்திகேயன் மதராஸி படப்பிடிப்பை முடித்த பின்னர், மீண்டும் பராசக்தி படப்பிடிப்பை தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.