Homeசெய்திகள்சினிமா'சுமோ' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

‘சுமோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

சுமோ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.'சுமோ' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, சரோஜா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. இவரது நடிப்பில் வெளியான தமிழ் படம், வணக்கம் சென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவர், சூது கவ்வும் 2 படத்தில் நடித்திருந்தார். அடுத்தது ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் பல வருடங்களுக்கு முன்பாக சுமோ என்ற படத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தை ஹோசிமின் இயக்கியிருந்தார். இதில் சிவா உடன் இணைந்து பிரியா ஆனந்த், யோகி பாபு, சதீஷ், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

காமெடி கலந்த கதைக்களத்தில் தயாராகி இருந்த இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்படம் நாளை (மே 23) டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ