தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் அரண்மனை 5 குறித்து பேசியுள்ளார்.பொதுவாகவே ஹாலிவுட் திரைப்படங்கள் தான் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவரும். அதே ஸ்டைலில் தமிழ் சினிமாவிலும் படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வகையில் சுந்தர்.சி அரண்மனை 1,2,3 ஆகிய காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் இயக்கும் பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு தான் சுந்தர் சி யை அடுத்தடுத்த பாகங்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட வைக்கிறது. கடந்த மே மாதம் சுந்தர் சி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து சுந்தர் சி கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தமன்னா, வடிவேலு கூட்டணியில் புதிய படம் ஒன்றை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி, “பேய் படத்தில் ஏன் கவர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறார்கள். பேயாக இருந்தாலும் அது கவர்ச்சியாக வந்தால் தான் இங்க வியாபாரமே நடக்குது. அரண்மனை 5ஆம் பாகத்திலும் கவர்ச்சி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.