spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் சுந்தர் சியின் 'வல்லான்' பட டிரைலர்!

கவனம் ஈர்க்கும் சுந்தர் சியின் ‘வல்லான்’ பட டிரைலர்!

-

- Advertisement -

சுந்தர் சி, தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் ராஷி கண்ணா, தமன்னா, பாக்கியராஜ், வடிவேலு ,மீனா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோரின் நடிப்பில் அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு இவர் படம் இயக்குவதில் மட்டுமல்லாமல் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் 2 திரைப்படம் வெளியானது. சுந்தர் சி, பாலக் லால்வாணி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர், ஆயிரா உள்ளிட்டோரின் நடிப்பில் VZ துரை இயக்கிய இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

we-r-hiring

இதற்கிடையில் சுந்தர் சி, வல்லான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சுந்தர்சியுடன் இணைந்து தான்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம் தலைவாசல் விஜய், சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி ஆர் மணி செய்யோன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

வி ஆர் டெல்லா ஃபில்ம் ஃபேக்டரி நிறுவனத்தின் கீழ் வி ஆர் மணிகண்டராமன் தயாரித்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் தயாநிதி இதற்கு இசை அமைத்துள்ளார்.திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது வல்லான் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

MUST READ