சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்தை வாழ்த்தி உள்ளார்.நடிகர் அஜித் கடந்த ஆண்டு தனது பெயரில் ரேஸிங் அணியை தொடங்கி துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் பங்கேற்று 992 போர்ஷே தொடரில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியை கையில் தேசிய கொடியுடன் ரசிகர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஜித். இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள அஜித்தின் இந்த வெற்றியை தங்கள் வெற்றியாக ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் அஜித்தின் இந்த சாதனைக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சாதித்து விட்டீர்கள். காட் பிளஸ் யூ. லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார். அஜித்தை வாழ்த்தி ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025
நடிகர் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அட்லி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.